20க்கு 20 உலக கிண்ண போட்டியில் ஹெட்ரிக் விக்கெட் எடுத்த 4ஆவது பந்துவீச்சாளர் ரபடா

சார்ஜாவில் நடந்த போட்டியில் இங்கிலாந்தை 10 ஓட்டங்கள் வித்தியாசததில் வீழ்த்தினாலும் தென் ஆபிரிக்கா அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது. 20க்கு 20 உலக கிண்ண தொடரில் நேற்றுமுன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் தென் ஆபிரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா அணி 189 ஓட்டங்கள் குவித்தது. இதையடுத்து, 190 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடியது.

இப்போட்டியின் கடைசி ஓவரை தென் ஆபிரிக்கா அணியின் ரபடா வீசினார். முதல் பந்தில் வோக்ஸ், இரண்டாவது பந்தில் மோர்கன், முன்றாவது பந்தில் ஜோர்டன் ஆகியோரை வெளியேற்றினார்.

இதன்மூலம் ரபடா ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ரி 20 உலக கிண்ண போட்டியில் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்திய 4ஆவது பந்துவீச்சாளர் ரபடா என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, 2007ம் ஆண்டில் அவுஸ்திரேலியாவின் பிரெட் லீ, இந்த ஆண்டு ரி 20 உலக கிண்ணத்தில் அயர்லாந்தின் கர்ட்டிஸ் கேம்பர், இலங்கையின் ஹசரங்க ஆகியோர் ஹெட்ரிக் விக்கெட் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mon, 11/08/2021 - 06:00


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை