சீரற்ற காலநிலை: 2, 20,000 குடும்பங்களுக்கு மின்சாரம் தடை

நாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக நேற்றுவரை 2,20,000 குடும்பங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின் துண்டிப்பை சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் வெகுவிரைவில் குறித்த பகுதிகளுக்கான மின்சாரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  மேற்படி அமைச்சு தெரிவித்தது.

சில பிரதேசங்களில் கற்கள் சரிந்துள்ளதுடன் மேலும் சில பகுதிகளில் மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டுள்ள நிலையில் அப் பகுதிகளுக்கான மின் விநியோகத்தை வழங்குவதில் சற்று தாமதம் ஏற்படலாம் என்றும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.(ஸ)

 

 லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 11/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை