இலங்கை மற்றும் சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான (ICC World Test Championship) முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 187 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
அதற்கமைய, ICC உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி முதல் இடத்தில் உள்ளது.
நேற்றைய நான்காவது நாள் ஆட்டநேர நிறைவில், மே.தீவுகள் அணி 52 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
அதற்கமைய, இன்றைய (25) 5ஆவது நாளை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி நிதானமான துடுப்பாட்டத்தை கையாண்டது.
அதற்கமைய, 348 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 160 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இப்போட்டி காலியில் நவம்பர் 21ஆம் திகதி ஆரம்பமானது.
இலங்கை 386 & 191/4 (40.5)
மேற்கிந்திய தீவுகள் 230 & 160 (79.0)
SRI LANKA 1ST INNINGS
WEST INDIES 1ST INNINGS
SRI LANKA 2ND INNINGS
WEST INDIES 2ND INNINGS (TARGET: 348 RUNS)
from thinakaran