ஒமிக்ரோன் புதிய 'கொவிட்19' பிறழ்வு இலங்கைக்குள் வரக்கூடிய அபாயம்

தொற்றாளர்களை அடையாளம் காண  மரபணு சோதனைகளை துரிதப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை

மிகவும் பயங்கரமான பிறழ்வு இதுவென விஞ்ஞானிகள் தெரிவிப்பு

தென்னாபிரிக்க வலயத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் புதிய கோவிட்19 பிறழ்வு தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக மரபணு பரிசோதனைகளை துரிதப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கான அனைத்து அளவுகோல்களையும் சுகாதார அமைச்சு முன்வைத்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று மருத்துவபீடத்தின் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார். புதிய பிறழ்வு எந்த நேரத்திலும் எமது நாட்டுக்கு வரக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும், இந்த மரபணு பரிசோதனைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பிசிஆர் சோதனையின் மூலம் புதிய வைரஸ் பிறழ்வை கண்டறிய முடியமென்றும், ஒமிக்ரோன் கொவிட்19 பிறழ்வின் "எஸ்" மரபணுவை அண்டிய சுமார் 30 பிறழ்வுகள் இருப்பதாகவும் அவர் கூறினார். இதன் காரணமாக மக்கள் உரிய சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி அவதானமாக இருக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, இந்த புதிய கொவிட்19 வகை பல பிறழ்வுகளை கொண்டதெனவும் மீண்டும், மீண்டும் தொற்றக் கூடிதென்றும் விஞ்ஞானிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, இஸ்ரேல் மற்றும் பெல்ஜியம், செக் குடியரசு, போட்ஸ்வானா மற்றும் ஹொங்காங் ஆகிய நாடுகளில் புதிய விகாரங்கள் பதிவாகியுள்ளன. தாம் இதுவரை சந்தித்த மிகவும் பயங்கரமான பிறழ்வு இது என்றும் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Mon, 11/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை