கொவிட்-19: வியட்நாமின் விஹாரைகளில் அஞ்சலி

கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களுக்காக வியட்நாம் பௌத்த விஹாரைகளில் நேற்று வெள்ளிக்கிழமை மணிகள் ஒலிக்கப்பட்டும், மெழுவர்த்தி ஏற்றியும், தூபங்கள் கொளுத்தியும், பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோருக்காக தேசிய அளவில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

உள்ளூர் பெருந்தொற்று தடுப்பு ஒழுங்குமுறையுடன் இணங்கி கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அஞ்சலி நிகழ்வை மேற்கொள்ள வியட்நாம் பௌத்த சங்க நிறைவேற்று சபையின் நிலைக் குழு, அதன் மாகாண மற்றும் நகர பிரிவுகளிடம் கோரியது.

பெருந்தொற்றினால் தமது அன்புக்குரியவர்களை இழந்த ஆயிரக்கணக்கான குடும்பத்தினரின் வேதனையை பகிர்ந்துகொள்வது, சம்பிரதாயமான ஆதரவை வழங்குவது மற்றும் இந்த கடினமான நேரத்தில் நாடு அதில் இருந்து மீண்டு வருவது, கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான விடயங்களை மேற்கொள்வது மற்றும் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை மீண்டும் ஆரம்பிப்பது மற்றும் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காகவும் இந்த அஞ்சலி இடம்பெற்றது.

வியட்நாமில் கொரோனா தொற்றினால் 23,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

Sat, 11/20/2021 - 09:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை