கொவிட்-19: பீஜிங் வணிக வளாகம் குடியிருப்புப் பகுதிகளுக்குப் பூட்டு

சீனத் தலைநகர் பீஜிங்கில் புதிய கொரோனா தொற்று சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து நகரில் உள்ள மிகப்பெரிய வணிக வளாகம் மற்றும் பல குடியிருப்புப் பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளன.

சீனாவின் பல பிராந்தியங்களிலும் நோய்த் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது அது தலைநகரின் மையப் பகுதியையும் சூழ்ந்துள்ளது.

தலைநகரில் முன்னணி கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் மூன்று நாள் கூட்டம் இடம்பெற்று வரும் நிலையிலேயே அங்கு நோய் பரவல் ஏற்பட்டுள்ளது.

இதில் பீஜிங்கின் சோயங் மற்றும் ஹெய்டியான் மாவட்டங்களில் நேற்று ஆறு புதிய தொற்று சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் வடகிழக்கு ஜிலின் மாகாணத்தில் அண்மையில் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களாவர்.

இதனை அடுத்து மத்திய பீஜிங்கில் உள்ள வணிக வளாகத்திற்கு தொற்று ஏற்பட்ட ஒருவருடன் நெருங்கிய ஒருவர் வந்து சென்றதால் அந்த வணிக வளாகம் மூடப்பட்டுள்ளது.

இந்த வளாகத்தில் இருந்து ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வைரஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Fri, 11/12/2021 - 10:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை