கொவிட்-19: உலகெங்கும் ஐந்து மில்லியன் பேர் பலி

உலகில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19 நோயால் உயிரிழந்ததாக ஜோன் ஹொப்கின்சன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. உண்மையில் அந்த எண்ணிக்கை அதிகமாயிருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த ஆண்டின் முதல் ஐந்தரை மாதத்தில் சென்ற ஆண்டைவிட அதிகமானோர் உயிரிழந்தனர். நோய்ப்பரவலைத் தடுப்பதற்கு மருந்து மட்டுமே தீர்வல்ல என்று உலக சுகாதார அமைப் எச்சரித்தது. அதே வேளையில் மக்கள் வைரஸ் தொற்றுக்கு ஆளாவதையும், மரணம் நேர்வதையும் தடுக்க, மருந்துகள் உதவுகின்றன. உலகம் முழுவதும் சுமார் 7 பில்லியன் முறை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. என்றாலும், தடுப்பு மருந்து விநியோகத்தில் ஏற்றத்தாழ்வு நீடிக்கிறது.

Wed, 11/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை