பெண் தொழில்முனைவோரது நன்மைக்காக 150 மில்லியன் டொலர் நிதியுதவி

இலங்கையின் சமூகம் சார்ந்த வணிகங்களின் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவாக அமெரிக்க அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை 12ஆம் திகதி DFCC வங்கிக்கு 150 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளது.

இது இலங்கைக்கான அமெரிக்க அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தால் (DFC) வழங்கும் மிகப்பெரிய கடன் வழங்கல் ஆகும். மேலும் இது உள்ளூர் நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை (MSME) துறைக்கு, குறிப்பாக பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்க வடிவமைக்கப்பட்ட 265 மில்லியன் டொலர் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும்.

இந்த பங்காளித்துவத்தின் ஊடாக, DFCC வங்கி முன்னுரிமைத் துறைகளில் கடன் வழங்கல் தீர்வுகளை வழங்கும் மற்றும் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்புக்கு ஆதரவளிக்கும். குறிப்பாக பெண்களின் தொழில் முயற்சியை மேம்படுத்துவதற்கான நாட்டின் முயற்சிகளை மேம்படுத்தும். பெண் தொழில்முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றான நிதியுதவிக்கான வரையறுக்கப்பட்ட அணுகலைச் சமாளிப்பதற்கு இது உதவும்.

Mon, 11/15/2021 - 07:22


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை