கடந்த 14 நாட்களுக்குள் சுற்றுலா பயணிகள் எவரும் வரவில்லை

சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவிப்பு

தென்னாபிரிக்காவில் மோசமான புதிய வகை திரிபு வைரஸ் பரவும் நிலையில் கடந்த 14 நாட்களுக்குள் தென்னாபிரிக்கா, நமீபியா, பொய்ஸ்வானா, சிம்பாப்வே, லெஷனோ மற்றும் சுவாசிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு எந்த சுற்றுலாப் பயணிகளும் வருகை தரவில்லையென சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பதிவின்படி அவ்வாறான எந்த நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததற்கான பதிவுகள் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை சுற்றுலாப்பயணிகள் தவிர்ந்த வேறு நபர்கள் இக்காலங்களில் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்களா? என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ள அமைச்சு, அது தொடர்பான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஓம்க்ரோன் புதிய திரிபு கொரோனா வைரஸ் எச்சரிக்கை நிலை காரணமாக மேற்படி நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களுக்குள் பயணித்துள்ள விமான பயணிகளுக்கு நாட்டுக்குள் வருவதற்கு நேற்றிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 11/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை