125 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழும் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை

125 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழும் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை-No Infrastructure Facilities to Mullaitivu Amathipuram Village

125 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழும் கிராமத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு, முல்லைத்தீவு, அமதிபுரம் கிராம மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் எல்லைப் பிரிவில் முல்லைத்தீவு அமதிபுரம் கிராமம் காணப்படுகின்றது. அருகில் அக்கராயன், பொன்னகர் கிராம அலுவலர் பிரிவுகள் காணப்படுகின்றன.

125 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்ற இக்கிராமத்தில் துணுக்காய் பிரதேச செயலகத்திற்குச் செல்லவதில் பல்வேறு அசௌகரியங்கள் நிலவுகின்றன. பேருந்து சேவைகள் கடந்த பத்தாண்டுகளாக நடைபெறவில்லை. மக்கள் சுய முயற்சியினால் செல்ல வேண்டி உள்ளது. அல்லது திருமுறிகண்டி சென்று பேருந்துகளில் மாங்குளம் வழியாக துணுக்காய் செல்ல வேண்டும்.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு செல்வது என்றால் பணம் செலவழித்து 100 கிலோ மீற்றருக்கு அதிகமான தூரம் சென்று திரும்ப வேண்டும். அக்கராயன் பிரதேச வைத்தியசாலைக்கு மூன்று கிலோமீற்றர் செல்ல வேண்டும். அக்கராயனில் இருந்து துணுக்காய் வரை பேருந்து சேவை நடாத்துங்கள் என இக்கிராம மக்கள் கடந்த பத்தாண்டுகளாக விடுத்துவரும் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

இக்கிராமத்தில் காணப்படுகின்ற பாலங்குளத்தினை முழுமையாக புனரமையுங்கள் என அமதிபுரம் கிராம அலுவலர் பிரிவு மக்கள் தொடர்ச்சியாக விடுத்து வரும் கோரிக்கைக்கு எவ்வித பயளும் கிடைக்கவில்லையென அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

(முல்லைத்தீவு குறூப் நிருபர் -  ந. கிருஸ்ணகுமார்)

Sun, 11/21/2021 - 15:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை