அவசர தேவைக்கு 117க்கு அழைக்கவும்

24 மணிநேரமும் சேவைக்கு தயார்

சீரற்ற வானிலை காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு வானிலை அனர்த்தத்திற்கும் முகம்கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், நாட்டின் எந்தப் பகுதியிலும் அனர்த்த நிலைமை ஏற்பட்டாலும் 117 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டின் 12 மாவட்டங்களில் நேற்று வரை 1,143 குடும்பங்களைச் சேர்ந்த 4,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளடன் 635 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 5 மரணங்கள் பதிவாகியுள்ளன. ஒருவர் காணாமல் போயிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இனிவரும் தினங்களில் ஏற்படக்கூடிய எந்தவொரு வானிலை அனர்த்தத்திற்கும் முகம்கொடுப்பதற்காக மத்திய நிலையம் தயாராக இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையப் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

நாட்டின் எந்தப் பகுதியிலும் அனர்த்த நிலைமை ஏற்பட்டால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்குத் தெரிவிக்க முடியும் எனவும் இது 24 மணி நேரமும் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tue, 11/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை