அங்கஜன் இராமநாதன் எம்பியின் முன்மொழிவில் யாழில் 10 விளையாட்டு மைதானங்கள் அபிவிருத்தி

நாடு முழுவதும் 200 விளையாட்டு மைதானங்களை புனரமைக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், அபிவிருத்தி செய்வதற்கென யாழ். மாவட்டத்தில் 10 விளையாட்டு மைதானங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் முன்மொழிவில் இந்த 10 விளையாட்டு மைதானங்களும் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன.

கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தில், ஒவ்வொரு மைதானத்துக்கும் தலா 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி மைதானம், காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி மைதானம், தெல்லிப்பளை அன்ரனிபுரம் விண்மீன் விளையாட்டுக்கழக மைதானம், பிரான்பற்று கலைமகள் வித்தியாலய மைதானம், ஆவரங்கால் வீனஸ் விளையாட்டுக்கழக மைதானம், கரவெட்டி கொலின்ஸ் விளையாட்டுக்கழக மைதானம், அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானம், மட்டுவில் வடக்கு கண்ணகி விளையாட்டுக்கழக மைதானம், கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானம், நாவாந்துறை சென். மேரீஸ் விளையாட்டுக்கழக மைதானம் ஆகிய இத்திட்டத்தின் மூலம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இளைஞர்களின் விளையாட்டுத்துறை திறமைகளை விருத்தி செய்வதன் ஊடாக யாழ். மண்ணில் சாதனைகளைப் படைக்கும் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில் இத்தகைய அபிவிருத்திகள் கௌரவ அங்கஜன் இராமநாதனின் முன்மொழிவில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Wed, 11/03/2021 - 06:00


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை