யாழ் மாவட்ட பாராளுமன்ற ஆசனம் 05 ஆக குறைந்தது

கம்பஹாவுக்கு ஓர் ஆசனம் அதிகரிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இதுவரை இருந்த 6 பாராளுமன்ற ஆசனங்கள் தற்போது 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது.புதிதாக பதியப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. அவ்வாறு குறைக்கப்பட்ட ஆசனம் கம்பஹா மாவட்டத்துக்கு கிடைத்துள்ளது.

கம்பஹா மாவட்டத்துக்கு இதுவரை இருந்து வந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 19ஆக அதிகரிக்கப்படுவதாக கம்பஹா மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் ஜயலால் தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்துக்கு இதுவரை இருந்து வந்த பாராளுமன்ற ஆசனங்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆகும். புதிய வாக்காளர் பதிவில் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு அமைய கம்பஹா மாவட்டத்துக்கு ஓர் ஆசனம் அதிகரித்திருக்கின்றது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு அமைய மாவட்ட மட்டத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படுகிறது.

Tue, 11/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை