சம்பந்தனுக்கு பின்னர் TNA கூட்டுத் தலைமையாக இயங்கும்

சுமந்திரனின் கருத்துக்கு செல்வம் பதிலடி

சம்பந்தனின் காலத்தின் பின் கூட்டுத்தலைமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயல்படும். சுமந்திரனின்  தனிப்பட்ட கருத்தை பெரிய விடயமாகப் பார்க்கத் தேவையில்லையென பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரிலுள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்த கருத்துத் தொடர்பில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைவராக உள்ள பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுக்கு பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை என்பது கூட்டுத்தலைமையாக இருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை தான் ஏற்கத் தயாரென பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்த கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து. அதை ஏற்பதா? இல்லையா? என்பதை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முடிவெடுக்கும். சம்பந்தனின் காலத்தின் பின் கூட்டுத்தலைமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயல்படும். அவரின் தனிப்பட்ட கருத்தை பெரிய விடயமாக பார்க்கத் தேவையில்லையென தெரிவித்தார்.

Sat, 10/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை