T20WC2021; AFGvPAK: பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி

T20WC2021; AFGvPAK: பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி-T20WC2021-AFGvPAK-Pakistan Won by 5 Wickets

- அடுத்தடுத்து 3 போட்டிகளிலும் வெற்றி
- இன்று இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் போட்டி

2021 ரி20 உலகக் கிண்ண தொடரின் நேற்று (29) துபாயில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை, பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதன்மூலம் பாகிஸ்தான் அணி இந்த உலகக் கிண்ண தொடரில், தான் விளையாடிய மூன்று போட்டிகளையும் வெற்றி கொண்டு, குழு 2 இல் முதல் இடத்தில் உள்ளது.

இறுதி வரை சுவாரஸ்யமாக சென்ற இப்போட்டியில் ஒரு கட்டத்தில் 18 பந்துகளில் 26 ஓட்டங்களை பெற வேண்டியிருந்த நிலையில், சிறப்பாக 18ஆவது ஓவரை வீசிய நவீன் உல் ஹக் 2 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தார்.

1 1 0 0 W 0

இதனைத் தொடர்ந்து 12 பந்துகளில் 24 ஒட்டங்களை பெற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு பாகிஸ்தான் அணி தள்ளப்பட்டது.

19ஆவது ஓவரை கரிம் ஜனத் வீச, அதனை ஆசிப் அலி எதிர் கொண்டார். குறித்த ஓவரில் 4 ஆறு ஓட்டங்களை குவித்த அவர், ஒரு ஓவர் மீதமிருக்க பாகிஸ்தான் அணியை வெற்றியின் எல்லைக்கு கொண்டு சேர்த்தார்.

6 0 6 0 6 6

போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அந்த வகையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 147 ஒட்டங்களை ஆப்கானிஸ்தான் அணி பெற்றது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்குள்ளேயே ஆட்டமிழந்தனர்.

அவ்வணி சார்பில் அணித்தலைவர் மொஹமட் நபி மற்றும் குல்பதின் நயீப் தலா 35 ஒட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் இமாத் வசீம் 2 விக்கெட்டுகளை கைப்பறினார். ஷஹீன் அப்ரிடி, ஹரிஸ் ரஊப், ஹஸன் அலி, ஷாதாப் கான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர்.

148 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் பாபர் அசாம் 51 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

அதிரடியாக ஆடிய ஆசிப் அலி ஆட்டமிழக்காது, 7 பந்துகளில் 25 ஒட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஷீத் கான் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். முஜீபுர் ரஹ்மான், மொஹமட் நபி, நவீன் உல் ஹக் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக ஆசிப் அலி தெரிவானார்.

இலங்கை - தென்னாபிரிக்க அணி மோதல்
இதேவேளை குழு 1 இல் உள்ள இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டி இன்றையதினம் (30) பி.ப. 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இரு அணிகளும் இரண்டு போட்டிகளில் விளையாடி ஒவ்வொரு வெற்றிகளை பதிவு செய்து 2 புள்ளிகளைப் பெற்றுள்ளதோடு, தற்போதைய நிலையில் குழுவில் 3ஆவது இடத்தில் தென்னாபிரிக்காவும், 4ஆவது இடத்தில் இலங்கையும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

AFGHANISTAN INNINGS (20 OVERS MAXIMUM)
BATTING   R B M 4s 6s SR
Hazratullah Zazai  c Haris Rauf b Imad Wasim 0 5 10 0 0 0.00
Mohammad Shahzad  c Babar Azam b Shaheen Shah Afridi 8 9 17 1 0 88.88
Rahmanullah Gurbaz  c Babar Azam b Hasan Ali 10 7 23 0 1 142.85
Asghar Afghan  c & b Haris Rauf 10 7 11 1 1 142.85
Karim Janat  c Fakhar Zaman b Imad Wasim 15 17 20 1 1 88.23
Najibullah Zadran  c †Mohammad Rizwan b Shadab Khan 22 21 30 3 1 104.76
Mohammad Nabi (c) not out 35 32 54 5 0 109.37
Gulbadin Naib  not out 35 25 42 4 1 140.00
Extras (lb 3, nb 3, w 6) 12  
TOTAL (20 Ov, RR: 7.35) 147/6  
Fall of wickets: 1-7 (Hazratullah Zazai, 1.3 ov), 2-13 (Mohammad Shahzad, 2.4 ov), 3-33 (Asghar Afghan, 4.3 ov), 4-39 (Rahmanullah Gurbaz, 5.1 ov), 5-64 (Karim Janat, 9.1 ov), 6-76 (Najibullah Zadran, 12.5 ov)
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
Shaheen Shah Afridi 4 0 22 1 5.50 12 2 0 3 1
Imad Wasim 4 0 25 2 6.25 14 1 2 1 0
Haris Rauf 4 0 37 1 9.25 9 5 1 1 0
Hasan Ali 4 1 38 1 9.50 12 5 1 1 2
Shadab Khan 4 0 22 1 5.50 15 2 1 0 0
 
 
PAKISTAN INNINGS (TARGET: 148 RUNS FROM 20 OVERS)
BATTING   R B M 4s 6s SR
Mohammad Rizwan  c Naveen-ul-Haq b Mujeeb Ur Rahman 8 10 10 1 0 80.00
Babar Azam (c)  b Rashid Khan 51 47 85 4 0 108.51
Fakhar Zaman  lbw b Mohammad Nabi 30 25 47 2 1 120.00
Mohammad Hafeez  c Gulbadin Naib b Rashid Khan 10 10 14 1 0 100.00
Shoaib Malik  c †Mohammad Shahzad b Naveen-ul-Haq 19 15 21 1 1 126.66
Asif Ali  not out 25 7 14 0 4 357.14
Shadab Khan  not out 0 1 7 0 0 0.00
Extras (lb 2, nb 1, w 2) 5  
TOTAL (19 Ov, RR: 7.78) 148/5  
Fall of wickets: 1-12 (Mohammad Rizwan, 2.3 ov), 2-75 (Fakhar Zaman, 11.1 ov), 3-97 (Mohammad Hafeez, 14.1 ov), 4-122 (Babar Azam, 16.6 ov), 5-124 (Shoaib Malik, 17.5 ov)
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
Mujeeb Ur Rahman 4 0 14 1 3.50 12 0 0 0 0
Mohammad Nabi 4 0 36 1 9.00 7 3 1 0 1
Naveen-ul-Haq 3 0 22 1 7.33 6 3 0 0 0
Karim Janat 4 0 48 0 12.00 4 2 4 0 0
Rashid Khan 4 0 26 2 6.50 9 1 1 1 0

 

Sat, 10/30/2021 - 10:38


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை