அடுத்த வருட ஆரம்பத்தில் சகலருக்கும் டிஜிட்டல் NIC

உலகத் தரம் வாய்ந்ததாக வழங்க ஏற்பாடு

தேசிய அடையாள அட்டை 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளதாக டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு முதல் உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அடையாள அட்டைகள் பொது மக்களுக்கு வழங்கப்படுமென இலங்கை மத்திய வங்கியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்காலத்தில் வீதிப்போக்குவரத்து அபராதங்கள் கூட டிஜிட்டல் மயமாக்கப்படும் என கூறியுள்ளார்.

 

Tue, 10/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை