யார் இந்த ஜோசப்? டிலான் MP கருத்து

மஹிந்த ஜயசிங்க குறித்தும் தகவல்

 

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டவரே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். அதிபர்,ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டம்  தொடர்பில் ஊடகங்களில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எமது இராணுவத்தினர் மக்களைக் கொன்றனர் எனக் குறிப்பிட்டு, யாழ்ப்பாணத்துக்குச் சென்று புலிகளுடன் இணைந்து போராடியவர்தான் ஜோசப் ஸ்டாலின் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மஹிந்த ஜயசிங்க என்பவர் ஜே.வி.பியின் முழு நேர அரசியல் செயற்பாட்டாளர். இவர்கள்தான் கல்விக் கட்டமைப்பைக் குழப்புகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Tue, 10/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை