மனுஷ நாணயக்கார MPயை CIDக்கு அழைத்தமை ஏன்?

பொலிஸ் பேச்சாளர் SSP நிஹால் விளக்கம்

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்டமை விவகாரம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்த கருத்து தொடர்பில் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

 

 

Fri, 10/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை