இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த ராஜித MPக்கு எதிரான வழக்கு நவம்பர் 10ல் விசாரணைக்கு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இவ்வழக்கு நேற்றையதினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொகமட் இர்ஸடீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் ஏனைய பிரதிவாதிகளாக மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் அதிகாரிகளான உபாலி லியனகே மற்றும் நீல் ரவீந்திர முனசிங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதிக்கும் அதே வருடம் நவம்பர் முதலாம் திகதிக்கும் உட்பட்ட காலகட்டத்தில் மோதரை மீன்பிடி துறைமுகத்தினை கல்ப் யு.கே.பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு குறைந்த விலையில் குத்தகைக்கு வழங்குவதற்கு அதிகாரிகளை தூண்டினார் என்றும் அதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

 

Tue, 10/05/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை