CIPM உலக மனிதவள மாநாடு டிசம்பரில்

நமது நாட்டின் மனிதவள முகாமைத்துவ தலைமைத்துவமாக விளங்கும் CIPM ஸ்ரீலங்கா மக்கள் முகாமைத்துவ சங்கத்தின் உலக கூட்டமைப்பு (WFPMA) மற்றும் மனிதவள முகாமைத்துவத்தின் ஆசிய பசுபிக் கூட்டமைப்பு (APFHRM) ஆகியவற்றுடன் இணைந்து உலக மனிதவள மாநாடு 2021ஐ கொழும்பில் மெய்நிகர் நிகழ்வாக நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த 22ம் திகதியன்று கொழும்பு மனிதவள முகாமைத்துவ தலைமையக கேட்போர்கூடத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டின்போது இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டது. எதிர்வரும் டிசம்பர் 6ஆம் திகதி முதல் 8ஆம் திகதிவரை கொழும்பில் மெய்நிகர் நிகழ்வாக நடைபெறவுள்ள இம் மாநாட்டில்

உலக தொற்றுநோய்க்கு மத்தியில் மக்கள் நிபுணர்களை உயரச்செய்வது: ஆராயுங்கள், விஸ்தரியுங்கள் மற்றும் சிறப்புறச் செய்யுங்கள் எனும் தொனிப்பொருளின்கீழ் உலக நாடுகளைச் சேர்ந்த துறைசார் நிபுணர்கள் மெய்நிகர் நிகழ்வின்மூலம் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். மாநாடு நடைபெறும் மூன்று நாட்களிலும் டிஜிட்டல் மாற்றம், இடையுூறுகள், பன்முகத்தன்மை மற்றும் விடாமுயற்சி போன்ற மனிதவள முகாமைத்துவத்தின் தெரிவுசெய்யப்பட்ட உலக அங்கீகாரம் பெற்ற பேச்சாளர்கள் தனித்துவமான பரிமாணங்களை புதிய உலகப்பணியில் தலைமைத்துவத்தின் ஊடாக தமது ஆலோசனைகளையும் உத்திகளையும் பகிர்ந்துகொள்ளவுள்ளனர். முக்கிய அம்சங்கள், பதிவு, எண்ணற்ற அனுசரணை வாய்ப்புகள் கிடைக்கவுள்ளதுடன் மேலதிக தகவல்களை உலக மனிதவள மாநாடு 2021இன் https://wfpmacongress.com/ இணையத்தளத்தை பார்வையிடுவதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

கடந்தாண்டு நடைபெறவிருந்த உலக மனிதவள மாநாடு உலகில் கொவிட் தொற்றுநோய் பரவல் காரணமாக இடம்பெறவில்லை. எனினும் இவ்வாண்டு இறுதிக்குள் அதனை நடத்தியாக வேண்டும். இலங்கையில் இந்த வரலாற்று ரீதியான நிகழ்வை நடத்துவதில் நாம் பெருமை கொள்கிறோம். உலகமே கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் இவ்வேளை எதிர்காலத்தில் உத்வேகம் தரும் தலைமைத்துவத்தை உருவாக்க இதிலிருந்து மீண்டெழுவது அவசியமாக உள்ளது. எதிர்நோக்கும் சவால்களுக்கு மத்தியில் புதிய தொழில் முயற்சிகள் மற்றும் வாழ்க்கையில் வளர்ச்சியடைந்து வருகின்றன. புத்தாக்கம் மக்கள் செயற்பாடுகளில் சிறந்த பயிற்சிகள் மற்றும் நம்பகத்தன்மை என்பன எமது எதிர்காலத்தை மீளக்கட்டமைத்துக் கொள்ளவும் நிலையான வளர்ச்சியை இலக்காகக் கொள்ளவும் மிகவும் முக்கியமானவையாக விளங்குகின்றன. இந்நிலையில் உலக மனிதவள மாநாடானது சவால்கள் மற்றும் புதிய மனிதவள நிகழ்ச்சி நிரலை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளைத் திட்டமிடுவதற்கு ஏற்ற இடமாகும் என CIPM இலங்கை தலைவரான ஜயந்த அமரசிங்க தெரிவித்தார்.

உலக மாநாடானது 93 நாடுகளைச் சேர்ந்த தேசிய சங்கங்களின் கூட்டமைப்புகள் ஒன்றிணைந்து WFPMA அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டமைப்பின் மூலம் உலகளாவிய ரீதியில் மக்கள் முகாமைத்துவ தொழில்தகைமைகளுக்கு ஆதரவு வழங்கும் அதிகார சபையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளோம். வலையமைப்பு வாய்ப்புகளுடன் சிந்தனையைத் தூண்டும் பேச்சாளர்களை ஒன்றிணைப்பதால் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவமிக்கதாக இருக்கும் என WFPMA தலைவர் பொப் மோர்டான் தெரிவித்ததுடன் மக்கள் தொழில் தகைமையாளர்கள் மற்றும் வணிகத் தலைவர்களை காங்கிரஸில் பங்கேற்ப அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த மெய்நிகர் மாநாடானது 4 முழுமையான அமர்வுகள், 4 குழு கலந்துரையாடல்கள் மற்றும் நான்கு கட்டங்களாக தொழில்நுட்ப அமர்வுகளையும் உள்ளடக்கியதாக அமையவுள்ளது. 21 அனுபவம் வாய்ந்த சர்வதேச பேச்சாளர்கள், குழு, தொகுப்பாளர்கள், குழு அங்கத்தவர்கள் வரிசையில் ஜோன்னி சீ. டெய்லர், Jr தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி, மனிதவள முகாமைத்துவ சங்கம், ஐக்கிய அமெரிக்கா, பீட்டல் சீஸ் பிரதம நிறைவேற்றதிகாரி, ஆளுமை அபிவிருத்திக்கான பட்டய நிறுவனம் யூ.கே. சுனிதா பயான்/வயலின் வித்துவான் மற்றும் சேமநலன் தொடர்பான மளிதவள பயிற்சியாளர் பேராசிரியர் டீ.வீ. ராவ், தலைவர் TVRLS இந்தியா, போல் மில்ஸ் பிரதம மக்கள் அதிகாரி, Mercedes AMG Petronas F1 Team மற்றும் டாக்டர் அர்ச்சன ஆர்க்காட் VP மனிதவள வர்த்தகத் தலைவர், Infosys McCamish ஐக்கிய அமெரிக்க போன்ற பல அனுபவம் வாய்ந்த பேச்சாளர்கள் பங்குகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sat, 10/30/2021 - 06:00


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை