நிவாரணம் கிடைக்காவிடினும் எரிபொருள் விலை அதிகரிக்காது

நிவாரணம் கிடைக்காவிடினும் எரிபொருள் விலை அதிகரிக்காது-Fuel Price

- மக்கள் மீது சுமையை செலுத்த முடியாது

நிவாரணம் கிடைக்காவிட்டாலும் எரிபொருள் விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலையில் தொடர்ந்து விநியோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் எரிபொருளின் விலை அதிகரிப்படுமாயின் மக்கள் மேலும் அசௌகரிய நிலையை எதிர்நோக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.

கனியவள கூட்டுத்தாபனம் பாரிய நட்டத்தில் இயங்குவதனால் திறைசேரியிடமிருந்து நிவாரணம் கோரப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நிவாரணம் கிடைக்காவிட்டாலும் தற்போதைய விலையில் எரிபொருளை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் (Brent oil) ரக எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை கடந்த மூன்று ஆண்டுகளின் பின்னர் 85 அமெரிக்க டொலரை எட்டியுள்ளது.

அத்துடன் அமெரிக்காவின் டபிள்யூ.டீ.ஐ ரக எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.28 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இதற்கமைய கடந்த மூன்று வாரங்களுக்குள் மாத்திரம் ப்ரெண்ட் (Brent oil) ரக எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக, சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் டபிள்யூ.டீ.ஐ ரக எண்ணெய் பீப்பாயின் விலை 3.5 சதவீதத்தினால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 10/18/2021 - 08:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை