ஈரானின் முதலாவது ஜனாதிபதி ஆபூல்ஹசன் பனிசதர் மரணம்

ஈரானில் 1979ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சி நடந்த பின் அந்நாட்டின் முதல் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஆபூல்ஹசன் பனிசதர் தமது 88ஆவது வயதில் காலமானார்.

1980இல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் அரசியலில் மதகுருக்களின் தலையீட்டை எதிர்த்ததற்காக பதவியேற்ற 16 மாதங்களிலேயே பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

பின் ஈரானில் இருந்து தப்பி பிரான்சில் வசித்து வந்தவர் கடந்த சனிக்கிழமை பாரிசில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்துள்ளார். ஈரானின் அதிஉயர் தலைவராக இருந்த ஆயத்துல்லா ரோஹுல்லா காமனெயிக்கு நெருங்கிய சகாவாக அரசியல் களத்தில் அறியப்பட்ட அவர் ஜனாதிபதி பதவிக்கு வந்த பின் மதகுருக்கள் அரசில் தலையிடுவதை எதிர்த்தார்.

ஈரான் - ஈராக் போர், அமெரிக்க தூதரகத்தினர் பிணைக் கைதியாக அடைத்து வைக்கப்பட்டிருந்த நிகழ்வு ஆகியவை இவரது பதவிக் காலத்தில் நடந்தவை.

Mon, 10/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை