வார இறுதி முதல் தட்டுப்பாடின்றி பால்மா பெறலாம்

 

வார இறுதியில் தட்டுப்பாடின்றி நுகர்வோர் பால்மாவினை சந்தைகளில் பெற்றுக்கொள்ள முடியுமென பால்மா வர்த்தகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

மேற்படி சங்கத்தின் முக்கியஸ்தரான லக்ஷ்மன் வீரசூரிய அது தொடர்பில் நேற்று தெரிவிக்கையில்: மேலும் 8000 தொன் பால் மாவுக்கான தட்டுப்பாடு தற்போது சந்தையில் நிலவுவதாகவும் மட்டுப்படுத்தப்பட்ட தினங்களில் ஒரே தடவையில் பெருமளவு பால்மாவை சந்தைக்கு விநியோகிக்க முடியாதுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் மேலும் 8 கொள்கலன் பால்மா விடுவிக்கப்படுவதற்காக துறைமுகத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நேற்றைய தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பால் மாவை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டதுடன் சில வர்த்தக நிலையங்களில் உள்ளூர் தயாரிப்பு பால்மா ஒருபக்கற் வீதம் மக்களுக்கு வழங்கப்பட்டதையும் காண முடிந்தது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 10/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை