வெளிநாடு செல்ல அவுஸ்திரேலிய நாட்டவர்களுக்கு அனுமதி

அவுஸ்திரேலியர்கள் இனி அரசாங்க அனுமதிபெறும் அவசியமின்றி மற்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள கட்டுப்பாட்டில் தளர்வு கொண்டுவரப்பட்டள்ளது.

18 மாதங்களாக அவுஸ்திரேலியாவின் சர்வதேச எல்லைகள் மூடப்பட்டிருந்தன. இனி வெளிநாடு செல்ல, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட குடிமக்கள் அரசாங்கத்திடம் முன்அனுமதி பெறத் தேவையில்லை.

அவுஸ்திரேலிய உள்துறை, சுகாதார அமைச்சுகள் வெளியிட்ட கூட்டறிக்கை அதனைத் தெரிவித்தது.

பிற நாடுகளைச் சேர்ந்த திறனாளர்களுக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கும் அவுஸ்திரேலியாவின் சர்வதேச எல்லை இவ்வாண்டு இறுதிக்குள் திறக்கப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.

“அவுஸ்திரேலியர்களுக்கு அவர்களின் வழக்கமான வாழ்வுக்கு திரும்ப நேரம் வந்துவிட்டது” என்று அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்தார்.

இதுவரை கட்டாய பணி அல்லது உயிரிழக்கும் தருவாயில் உள்ள உறவினர்களை பார்க்கச் செல்வது போன்ற விடயங்கள் தவிர்த்து அவுஸ்திரேலியர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருந்தது.

Thu, 10/28/2021 - 12:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை