எரிபொருள் பற்றாக்குறையால் இருளில் மூழ்கியது லெபனான்

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் லெபனானில் மின்சாரம் இன்றி முழு நாடும் இருண்டு காணப்படுகிறது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்டில் இரண்டு மிகப்பெரிய மின்சார உற்பத்தி நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக அரச அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) மதியம் தொடக்கம் மின் விநியோக அமைப்பின் செயற்பாடுகள் முற்றாக நிறுத்தப்பட்டதோடு சில நாட்களுக்கு மீண்டும் அதனை செயற்பட வைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

கடந்த 18 மாதங்களாக லெபனானில் கடும் பொருளாதார நெருக்கடியும் எரிபொருள் தட்டுப்பாடும் இருந்து வருகிறது. இந்தப் பிரச்சினையால் மக்கள் தொகையில் பாதி அளவானவர்கள் வறுமையில் சிக்கி இருப்பதோடு, நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி அடந்த நிலையில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.

போதிய அந்நியச் செலாவணி இல்லாதது வெளிநாட்டு எரிபொருள் விநியோகத்திற்கான பணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Mon, 10/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை