பாகிஸ்தான் பிரதேசம் சூறையாடப்படுவதாக பாக். அரசு மீது குற்றச்சாட்டு

எதிரப்புத் தெரிவிக்கும் பிராந்தியக் கட்சி

பாகிஸ்தானின் மாகாணங்களில் ஒன்றான கில்கிட் பால்திஸ்தான் சட்டவிரோதமாக இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதி என்றும் கடந்த எழுபது ஆண்டுகளாக இப்பிரதேசத்தின் வளங்கள் வெளியாரின் சுரண்டல்களுக்கு ஆளாகி வருவதால் சுதேசிகள் ஏழ்மைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் இப்பிராந்திய அரசியல் கட்சியான அவாமி நடவடிக்கை கமிட்டி தெரிவித்துள்ளது.

இப் பிராந்தியத்தின் கனிம வளங்களை பயன்படுத்தும் உரிமையும், சுற்றுலா ஹோட்டல்களை அமைக்ககும் உரிமையும் வெளியாருக்கு வழங்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டும் இக்கட்சியின் தலைமை, இப்பிராந்திய மக்கள் கருத்துக்கள் கேட்கப்படாமலேயே பாக். அரசு சட்டங்களை இயற்றுவதுடன் இங்கு பெறப்படும் வருமானம் இம்மக்களுக்கு செலவிடப்படாமல் பாக். செல்வந்தர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மத்தியில் பங்கிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இப்பகுதியில் சுரங்கத் தொழில் செய்வது, கனிம வளங்களை அகழ்ந்து எடுப்பது, காணிகளை குத்தகைக்கு விடுவது தொடர்பாக பாக். அரசு எங்களுடன் கலந்து ஆலோசிப்பதே இல்லை. எமது வளங்களை வெளியாருக்கு கொடுப்பதால் இங்கு வறுமையும், வேலை வாய்ப்பின்மையும் அதிகரிக்கிறது என்று இக்கட்சியின் தலைவர் பிடா ஹுசைன் கூறியுள்ளார்.

கில்கிட் பால்திஸ்தான் சுதந்திரமாக இயங்கிவந்த பிரதேசமாகும். பிரிவினையின் பின்னர் தனிநாடான பாகிஸ்தான் இப்பிரதேசத்தை சட்ட விரோதமாக இணைத்துக்கொண்டு அதன் வளங்களை சூறையாடுவதாக இங்கு வாழும் மக்கள் கருதுகின்றனது.

Tue, 10/26/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை