தடுப்பூசி போட்டவர்களிடம் இருந்தும் கொரோனா பரவல்

கொவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொண்டவர்கள் மூலமும் வைரஸ் பரவலாம் என பிரிட்டிஷ் நோய்த்தொற்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் மூலம் பரவக்கூடிய அளவுக்கு, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மூலமும் வைரஸ் பரவலாம் என அவர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

ஆய்வின் முடிவுகள் ‘தி லன்செட்’ மருத்துவச் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

மிதமான அறிகுறிகள் அல்லது அறிகுறிகளே காட்டாத நோய்த்தொற்று கொண்டவர்கள், தங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு வைரஸை பரப்பக்கூடிய அபாயம் சுமார் 40 வீதம் உள்ளது என நிபுணர்கள் குறிப்பிட்டனர். எனினும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோர், அதிலிருந்து விரைவில் குணமடைகின்றனர் என்பதையும் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியது.

Sat, 10/30/2021 - 10:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை