வெலிமிட்டியாவே குசலதம்ம தேரருக்கு அரச அனுசரணையில் இறுதிக் கிரியைகள்

வெலிமிட்டியாவே குசலதம்ம தேரருக்கு அரச அனுசரணையில் இறுதிக் கிரியைகள்-Walamitiyawe Kusaladhamma Thero Passed Away-Final rites of Ven. Welamitiyawe Kusala Dhamma Thero under full state patronage

களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும் கொழும்பு மற்றும் சிலாபம் மாவட்ட நீதிமன்றங்களின் சங்கசபைத் தலைவரும், பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவின் தலைவரும், அக்கமஹா பண்டிதர் டொக்டர் அதி. வணக்கத்துக்குரிய வெலிமிட்டியாவே குசலதம்ம தேரர் காலமானார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகளை, பூரண அரச அனுசரணையுடன் நடத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் புத்தசாசன அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களைத் தொடர்புகொண்டுள்ள ஜனாதிபதி, இறுதிக் கிரியைக்கான நிகழ்வுகளை, பூரண அரச அனுசரணையுடன் நடத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளார். 

Thu, 10/28/2021 - 11:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை