விவசாயக் கொள்கையில் மாற்றம் தேவை

ரோகினி கவிரத்ன எம்.பி

நாட்டின் விவசாயக் கொள்கையில் குறைபாடுகள் காணப்படுவதாக மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோகினி கவிரத்ன தெரிவித்தார்.

மாத்தளையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் விவசாயக் கொள்கையில் குறைபாடுகள் காணப்படுகின்றன. நாட்டிற்கு தேவைப்படும் மொத்த இயற்கைப் பசளையில் 2 சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றது. இதனால் விவசாயிகள் மட்டுமில்லாமல் நாடே ஏமாற்றப்படுகின்றது. விவசாய அமைப்புக்கள் வழமையாக நடத்தும் கூட்டங்கள் அல்லது கலந்துரையாடல்கள் மிகக் குறைந்த அளவிலேயே தற்போது நடக்கின்றது. இது பெரும்போக உற்பத்தியில் பாதிப்புச் செலுத்தலாம். அரசின் தவறான விவசாயக் கொள்கையே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்தார்.

கொழும்பு இ.தொ.காவின் தலைமை காரியாலயத்தில் சௌமிய பவானில் நவராத்திரி பூஜை வழிபாடுகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைப்பெற்றது. அதேவேளை கொட்டகலை C.L.F காரியாலயத்திலும் நவராத்திரி பூஜை வழிப்பாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அக்குறணை குறூப் நிருபர்

Fri, 10/15/2021 - 12:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை