திருமலையில் முப்படையினரின் கூட்டு பயிற்சி இறுதிநாள் நிகழ்வு

திருகோணமலை கும்புறுபிட்டி பிரதேசத்தில் முப்படையின் 11 வது இலங்கை ஆயுதப் படைகளின் முதன்மையான கூட்டு களப் பயிற்சி இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வு புதன்கிழமை (29) இடம்பெற்றது.

இந் நிகழ்வில் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் அரிஃபுல் இஸ்லாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இக் கூட்டு பயிற்சி தொடர்பில் விளக்கமளித்த இராணுவ தளபதி சவேந்திர சில்வா, இக்கூட்டு பயிற்சியானது இலங்கை ஆயுதப் படைகளின் முதன்மையான கூட்டு களப் பயிற்சி ஆகும், மேலும் இது சிறப்பு இயக்கப் படைகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இராணுவத்தினரின் பங்கேற்புடன் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த பயிற்சியின் நோக்கம் திறமையான இராணுவ வீரர்களை உருவாக்குவது மற்றும் வேலைவாய்ப்புக்கான ஒரு கருத்தியல் கட்டமைப்புக்காக வடிவமைக்கபட்டதாக தெரிவித்த இராணுவ தளபதி, இப்பயிற்ச்சி செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை இடம்பெற்றது. இக் கூட்டு பயிற்சியில் இலங்கை முப்படையினரின் 444 உயர் அதிகாரிகள் உள்ளடங்கலாக 3019 இலங்கை முப்படை வீரர்களையும் அடங்கியதாக அமைந்திருந்தது.

மேலும் இந்தியா, பங்களாதேஷ்,மாலைதீவு மற்றும் ஓமான் போன்ற ஐந்து வெளி நாடுகளை சேர்ந்த 08 உயர் அதிகாரிகள் அடங்கலாக 29 வெளிநாட்டு இராணுவ வீரர்களும் இக் கூட்டு பயிற்ச்சியில் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்கூட்டு பயிற்ச்சியில் இராணுவத்தினர், கடற்படையினர், விமான படையினர் மற்றும் விசேட அதிரடி படையினரின் இப் பயிற்சியினை பார்க்கும் போது, நாட்டில் யுத்தம் இல்லை என்றாலும் எந்நேரமும் இலங்கை முப்படை தயார் நிலையில் இருக்க இது சிறந்த பயிற்சியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடை பெற்றதுடன், முப்படையின் உயரதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(ரொட்டவெவ குறூப் நிருபர்)

Sat, 10/02/2021 - 11:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை