நண்பர் மஹிந்தவை விரைவில் சந்திப்பேன்

டுவிட்டரில் சுப்ரமணியன் சுவாமி பதிவு

 

 இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேச விரைவில் இலங்கை செல்லவுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி( தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொடவை தனது இல்லத்துக்கு அழைத்து தேநீர் விருந்து கொடுத்தமை தொடர்பிலும் இலங்கைக்கான பயணம் குறித்தும் தனது டுவிட்டர் பக்கத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, விரைவில் சிறிலங்கா சென்று நண்பர் ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரை சந்திப்பேன். இன்னும் எனது பயணம் விபரம் இறுதி செய்யப்படவில்லை. பயண விபரம் வடிவமைக்கப்பட்ட பிறகு அது குறித்த மேலும் சில தகவல்களை ட்விட்டரில் பகிர்வேன், எனவும் தெரிவித்துள்ளார்.

Sat, 10/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை