கடத்தப்பட்டோரின் பெற்றோர் நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல்

அக்டோபர் 29ல் விசாரணைக்கு வரும்

கடற்படை வீரர்கள் சிலரினால் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை  தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்ணாகொடவுக்கு எதிராக கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டிருந்த குற்றப் பத்திரிகையை வாபஸ்பெறுவதற்கு சட்டமா அதிபர் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி காணாமற் போனோரின் பெற்றோர்கள் நான்குபேர் தாக்கல்செய்துள்ள ரிட் மனு மீதான விசாரணையை எதிர்வரும் 29 ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளதாக உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க எதிர்வரும் 29 ஆம் திகதி பிரதிவாதிகளான சட்டமா அதிபர் மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரண்ணாகொட ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் மனுதாரர்கள் சார்பிலான சட்டத்தரணிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேற்படி ரிட் மனு யோஹித்த ராஜகருணா, தம்மிக்க கலேபொல ஆகியோர் உள்ளிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. (ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 10/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை