இஸ்ரேலில் புது டெல்டா திரிபு

இஸ்ரேலில் கொரோனா தொற்றின் டெல்டா வகையைச் சேர்ந்த புதியதொரு ரகம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஏ.வை. 4.2 ரக வைரஸ், ஐரோப்பாவில் சில நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. ஐரோப்பாவிலிருந்து அங்கு சென்ற 11 வயதுச் சிறுவன், அத்தகைய வைரஸ் திரிபை முதன்முதலில் இஸ்ரேலுக்குள் கொண்டு சென்றதாக நம்பப்படுகிறது.

அவன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை அமைச்சு உறுதிசெய்தது.

மற்ற கொரோனா வைரஸ் வகைகளைப் போல் அதிவேகத்தில் பரவுவது, உடலில் அதிகப் பாதிப்பு ஏற்படுத்துவது போன்றவற்றை ஏ.வை. 4.2 திரிபு செய்யாது என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.  

Thu, 10/21/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை