சீனா மீது அமெரிக்கா மேலதிக வர்த்தக கட்டுப்பாடுகளை விதிக்கலாம்

அமெரிக்க- சீன ஒப்பந்தத்தை சீனா கடைப்பிடிக்கவில்லை

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை சீனா முழுமையாகக் கடைப்பிடிக்கவில்லை என்றும் அது அமெரிக்க நலன்களுக்கு எதிராக இருப்பதாகவும் பைடன் நிர்வாகம் கருதுவதாக வொஷிங்டன் தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கெதிரின் தாய், ஒப்பந்தப்படி நடந்துகொள்ளாத சீனாவின் மீது மேலதிக இறக்குமதி கட்டுப்பாடுகளை பைடன் நிர்வாகம் விதிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே டொனால் ட்ரம்பின் காலத்தில் 2019ம் ஆண்டு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் 2020 முதல் 2021 வரையிலான காலப்பகுதியில் சீனா அமெரிக்காவிடமிருந்து 200 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களை மேலதிகமாகக் கொள்வனவு செய்திருக்க வேண்டும். ஆனால் இந்த வாக்குறுதியை சீனா நிறைவேற்றவில்லை எனத் தெரிய வந்ததையடுத்தே பதில் நடவடிக்கைகளை எடுக்க பைடன் நிர்வாகம் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சீனாவின் இப்போக்கு அமெரிக்க பண்ணையாளர்கள், வர்த்தகர்கள, தொழிலாளர்கள், தயாரிப்பாளர்கள பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சீனாவின் வர்த்தக நடவடிக்கைகள் அமெரிக்க நலன்களுக்கு சார்பானவையாக இல்லை என்றும் பைடன் நிர்வாகம் கருதுவதாக சிரேஷ்ட அமெரிக்க நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். சீனா தான் செய்யத் தவறியவற்றை செய்யும் வகையில் அதிபர் ஜோ பைடன் நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Fri, 10/08/2021 - 08:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை