கொலம்பியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்குள் மர்ம நோய் பரவல்

கொலம்பியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்குள் மர்ம நோய் பரவல்-Havana syndrome reported at US embassy in Colombia

அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் பயணத்திற்கு சில நாட்களே இருக்கும் நிலையில், கொலம்பியாவில் ஹவானா சிண்ட்ரோம் (Havana Syndrome) சாத்தியங்கள் உள்ள சம்பவம் பதிவாகி இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பொகோடாவில் உள்ள அமெரிக்க தூதரக பணியாளர் ஒருவர் மர்ம நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் அவரின் காதுகளில் ஒலியுடன் வலி ஏற்பட்டிருப்பதோடு சோர்வு மற்றும் மயக்க நிலைக்கும் முகம்கொடுத்துள்ளார்.

இவ்வாறான மர்ம நோயினால் முதல் முறை 2016 ஆம் ஆண்டு கியூபாவில் அமெரிக்க இராஜதந்திரிகள் பாதிக்கப்பட்டனர். அது தொடக்கம் இந்த நோய்க்குறி சம்பவங்கள் பல இடங்களில் பதிவாகியுள்ளன.

இந்த நோயின் பூர்வீகம் அறியப்படாத நிலையில், இது ஒருவகை ஆயுதத் தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக கொலம்பிய ஜனாதிபதி இவான் டுகு, நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா இந்த விசாரணையில் முன்னின்று செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Thu, 10/14/2021 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை