ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

அரசியல் பழிவாங்கல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த நல்லாட்சி  காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த, தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அதன் பதவிக்காலத்தை மேலும் நீடித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது அதற்கமைய, நேற்றுமுன்தினம் நிறைவடைந்த இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் 2022 ஏப்ரல் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 

 

Sat, 10/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை