நபிகளார் காட்டிய அருள்வழியை பின்பற்ற திடசங்கற்பம் பூணுவோம்

-நபிகளார் காட்டிய அருள்வழியை பின்பற்ற திடசங்கற்பம் பூணுவோம்Marjan Faleel-Meelad-Un-Nabi

- மீலாத் தின வாழ்த்தில் மர்ஜான் பளீல் எம்.பி

உலகத்தாருக்கு அல்லாஹ்வின் இறுதித்தூதராக அருள் வழிகாட்டியாக அனுப்பப்பட்ட நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்ற இன்றைய மகிழ்ச்சியான நன்நாளில் நாட்டிலும் சமூகத்திலும் அமைதி சுபீட்சம் ஏற்பட பிரார்த்திப்பதோடு நபிகளார் விட்டுச்சென்ற பணிகளை வாழ்வில் முழுமையாக பின்பற்றி நடக்க இன்றைய மீலாத் தினத்தில் அனைவரும் திடசங்கற்பம் பூணுவோமென பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் விடுத்துள்ள மீலாத் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அச்செய்தியில் அவர் மேலும் குறிப்பட்டிருப்பதாவது,

உயிரிலும் மேலான நபி (ஸல்) அவர்கள் ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12 இல் இவ்வுலகில் அவதரித்தார். இவரின் வருகை இருளடைந்த முழு உலகிலும் ஒளி வீச அடித்தளமானது.

அன்றைய ஜாஹிலிய்யக் (இருண்ட யுகம்) கால மக்களை மனிதப் புனிதர்களாக மாற்றி உலகிலே நீதியை ஓங்கச்செய்த ஒரு சமூகத் தலைவராக நபி (ஸல்) அவர்கள் இன்று வரை அனைத்து இன மக்களாலும் மதிக்கப்படுகிறார். அதற்குக் காரணம் அவர்களின் சிறந்த நற்பண்புகளும் நற்குணங்களுமேயாகும்.

அன்றைய சமூகத்தில் இஸ்லாத்தின் தூதை அவர் முன்வைத்த போது அவர் எண்ணிறைந்த துன்ப துயரங்களை எதிர்கொண்டார். இருந்தபோதிலும் பொறுமையையும் அமைதியையும் கடைபிடித்தார். இறுதியில் இறைவன் அவருக்கு வெற்றியை வழங்கினான்.

அந்தவகையில் உலகிலே பாரிய மாற்றத்தை உருவாக்கிய மனிதப்புனிதராக அவர் விளங்குகிறார். அல்குர்ஆனிய சமூகமொன்றை இவ்வுலகில் உருவாக்கி விட்டுச்சென்ற அண்ணலாரின் பணிகளை எமது வாழ்வில் கடைபிடித்து நடப்பதற்கு இன்றைய நன்நாளில் இருகரமேந்தி பிரார்த்திப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(அஜ்வாத் பாஸி)

Tue, 10/19/2021 - 08:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை