சிகரெட்டுகளுடன் இருவர் கைது

2 கோடி ரூபா பெறுமதி

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 264,200 சிகரெட்டுகள் களனி, - கோணவல - கொஹொல்வில பகுதியில் ​பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் வத்தளை - ஹுணுப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய, களனி - கோணவல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது அவ்வீட்டிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட மேலும் ஒரு தொகை சிகரெட்டுகளுடன் 48 வயதான நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சிகரெட்டுகளின் பெறுமதி சுமார் 2 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக களனி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Wed, 10/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை