இந்திய இராணுவத் தளபதி திருகோணமலைக்கு விஜயம்

அரச அதிபருடன் சந்தித்துரையாடினார்

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந் நரவானே நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சனவை அரசாங்க அதிபரின்

உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்திய இராணுவத் தளபதியால் அரசாங்க அதிபருக்கு நினைவுப் பரிசில் வழங்கப்பட்டதுடன் மாவட்ட அரசாங்க அதிபரும் இந்திய இராணுவ தளபதிக்கு நினைவு பரிசிலொன்றை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

 

Sat, 10/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை