ஈராக் கிராமத்தில் ஐ.எஸ் குழு தாக்குதல்; பதினொருவர் பலி

கிழக்கு ஈராக்கின் தியால் மாகாணத்தில் இருக்கும் கிராமம் ஒன்றின் மீது இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழு நடத்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

அல் ஹவாசா என்ற கிராமத்தில் பாதுகாப்பு இன்றி இருந்த பொது மக்களே கடந்த செவ்வாக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக ஈராக் பாதுகாப்பு படை குறிப்பிட்டுள்ளது.

பல வாகனங்கள் மற்றும் அரை தானியங்கி துப்பாக்கிகளை பயன்படுத்தி துப்பாக்கிதாரிகள் இந்தத் தாக்குதலை நடத்தி இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரம்பத்தில் ஐ.எஸ் குழுவினர் இரு கிராமத்தவர்களை கடத்திச் சென்ற நிலையில் அதற்காக அவர்கள் கேட்ட பிணையை கொடுக்கத் தவறியதை அடுத்து அந்த கிராமம் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக இரு பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏ.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த அனைவரும் பொதுமக்களாவர்.

Thu, 10/28/2021 - 08:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை