உச்ச நீதிமன்றில் எதிர்த்து அடிப்படை உரிமைமீறல் மனு

மல்கம் ரஞ்சித், குணவன்ச தேரர் தாக்கல்

 

யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை நியூ ஃபோர்ட்ரஸ் எனும் புதிய நிறுவனத்திற்கு மாற்றுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி உச்ச  நீதிமன்றத்தில் கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அமைச்சரவை அமைச்சர்கள், அமைச்சரவை செயலாளர், நிதி செயலாளர், உட்பட 54 பேர் இந்த விண்ணப்பத்தில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

விண்ணப்பத்தில் வாதியாக நியூ ஃபோர்ட்ரஸ் நிறுவனம் பெயரிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 6 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பில் அமைச்சரவையில் எட்டப்பட்ட முடிவை இரத்து செய்து, இவ் அடிப்படை மனுவை விசாரிக்கும் வரை ஒப்பத்தை அமல்படுத்தப்படுவதைத் தடுக்குமாறும் அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 10/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை