சர்வதேச ஆசிரியர் தின சிறப்பு நிகழ்ச்சி

சர்வதேச ஆசிரியர் தின சிறப்பு நிகழ்ச்சிTeacher's Day Programme

'ஆசிரியம் - அருள்களும் அர்ப்பணங்களும்'

சர்வதேச ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு தெல்தோட்டை ஊடக மன்றத்தின் கீழ் இயங்கும் அருள்வாக்கி அப்துல் காதிர் கலை, இலக்கிய கழகம் சிறப்பு நிகழ்ச்சியொன்றை நடாத்த தீர்மானித்துள்ளது.

சிறப்புரையுடன் கவியரங்கும் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்சிறப்பு ஆசிரியர் தின நிகழ்வானது எதிர்வரும் 2021ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி புதன்கிழமை மாலை 4.00 மணி முதல் நிகழ்நிலையில் (zoom) இடம்பெறவுள்ளது.

சிறப்புரையானது 2022ஆம் ஆண்டு புதிய கல்விச் சீர்த்திருத்தமும் ஆசிரியர்களின் வகிபங்கும் எனும் தலைப்பில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் உரையினை நிகழ்த்துவதற்கு வளவாளராக இந்த துறையில் தொடர்ந்து செயற்பட்டு வருபவரும், எமது தெல்தோட்டை மண்ணுடன் நெருங்கிய தொடர்புள்ளவருமான  தேசிய கல்வி நிறுவகத்தில் விரிவுரையாளரும், teachmore.lk இணையத்தளத்தின் நிறுவுனருமான ஜெஸார் ஜவ்பர் கலந்து கொள்ள உள்ளார்.

சிறப்புரையினைத் தொடர்ந்து கவிஞர் திரு. பஹ்மி ஹலீம்தீனின் தலைமையில் பிரதேச ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் கவியரங்கமொன்றும் இடம்பெறவுள்ளது. 'ஆசிரியம் - அருள்களும் அர்ப்பணங்களும்' என்ற தலைப்பில் இக்கவியரங்கு இடம்பெறவுள்ளது.

சர்வதேச ஆசிரியர் தின சிறப்பு நிகழ்ச்சிTeacher's Day Programme

Sun, 10/03/2021 - 14:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை