ஓமானுடனான ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்து

பெற்றோல் 18,டீசல் 35 ரூபாவிலும் இழப்பு

ஓமானிடமிருந்து 3.6 பில்லியன் டொலர் கடனை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்திடப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில  தெரிவித்தார்.

5 வருடத்திற்கு ஒருமுறை என்ற அடிப்படையில் 20 வருட காலத்திற்குள் மீண்டும் அக்கடனை செலுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் அமையும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

உலகளவில் எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் நாட்டுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதாக அமைச்சர் உதய கம்மன்பில கூறினார்.

தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒரு லீட்டர் டீசலுக்கு 35 ரூபாய் மற்றும் ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு 18 ரூபாய் இழப்பை சந்தித்து வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

Thu, 10/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை