மழையினால் கைவிடப்பட்ட நீலங்களின் சமர் முதல்நாள் ஆட்டம்

நீலங்களின் சமர் (Battle of Blues) என அழைக்கப்படும், கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிசை புனித தோமியர் கல்லூரி அணிகள் இடையிலான 142ஆவது கிரிக்கெட் பெரும் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையினால் கைவிடப்பட்டது.

இலங்கையின் முன்னணி பாடசாலைகள் இடையே நடைபெறுகின்ற மூன்று நாட்கள் கொண்ட நீலங்களின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டி, இந்த ஆண்டு கொழும்பு SSC மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட நிலையில் இன்று கொழும்பில் பெய்த கனமழை காரணமாக போட்டியின் முதல்நாள் ஆட்டம் நாணயச் சுழற்சியுமின்றி கைவிடப்பட்டிருக்கின்றது.

நீலங்களின் சமரின் நடப்புச்சம்பியனாக கல்கிசை புனித தோமியர் கல்லூரி அணி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sat, 10/30/2021 - 08:18


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை