மிக மோசமான பொருளாதார, அகதி பிரச்சினையில் ஆப்கான்

சர்வதேச நாணய சபை எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தையடுத்து இவ்வாண்டு அதன் பொருளாதாரம் 30 சதவீதத்தால் வீழ்ச்சி அடையலாம் என்றும் அந்நாட்டு மக்கள் அகதிகளாக வெளியேறிவருவது அண்டைய நாடுகளை மட்டுமின்றி துருக்கி, ஐரோப்பிய நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சர்வதேச நாணய சபை தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாயன்று சர்வதேச நாணய சபை வெளியிட்ட பிராந்திய பொருளாதார நிலைமைகள் தொடர்பிலான அறிக்கையில், ஆப்கானுக்குக் கிடைத்துவந்த வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து பொருளாதார உதவிகளைச் சார்ந்திருந்த அந்நாடு மோசமான நிதி நெருக்கடியையும் கடன் திரும்பச் செலுத்தலில் பாரிய பிரச்சினையையும் எதிர்கொண்டிருப்பதாக காமாபிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்கானில் காணப்படும் இந் நிலையானது அந்நாட்டு எல்லைகளையும் தாண்டி ஏனைய நாடுகளிலும் தாக்கம் செலுத்தலாம் என்றும் அகதிகள் பிரச்சினை பாரிய விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்வு கூறியுள்ள சர்வதேச நாணய சபை, அகதிகளை வைத்திருக்கும் நாடுகளின் வளங்களிலும், உள்ளூர் தொழிலாளர் சந்தையிலும் தாக்கங்களை இப் பிரச்சினை ஏற்படுத்தி சமூக நெருக்கடிகளை உருவாக்கும் என்றும் கூறியுள்ளது.

ஆப்கான் மக்களின் வாழ்க்கைத்தரம் பெரும் சரிவை சந்தித்து பல லட்சக்கணக்கான மக்களை வறுமைக்குள் தள்ளும் என்பதால் சர்வதேச சமூகத்தின் உதவி அவசியப்படுவதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sat, 10/23/2021 - 10:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை