போராட்டத்தைக் கைவிட்டு விவசாயத்தில் ஈடுபடுங்கள்

விவசாயிகளுக்கு அமைச்சர்- மஹிந்தானந்த அழைப்பு

பெரும்போக விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரம் விவசாயிகளுக்கு முழுமையாக வழங்கப்படும்

நனோ திரவ உரத்தை பயன்படுத்தி குறைவான விளைச்சலை பெறும் விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியீடு

நனோ- நைட்ரஜன் திரவ உரத்தை பயன்படுத்தி குறைவான விளைச்சலை பெறும் விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் சுற்றறிக்கை எதிர்வரும் வாரம் வெளியிடப்படும். பெரும்போக விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரம் விவசாயிகளுக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. ஆகவே விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற இணையவழி முறைமை ஊடாக ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இறக்குமதி செய்யப்படும் உரமானது, அவசியம் என உறுதிப்படுத்தப்பட்ட பயிர்ச்செய்கைகளுக்கு தேவையான உரம் மற்றும் கிருமிநாசினிகளை மூன்று அமைச்சுக்கள் ஊடாக இறக்குமதி செய்ய விவசாயத்துறை அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய தேயிலை மற்றும் தெங்கு உட்பட பெருந்தோட்ட பயிர்ச்செய்கைக்கு தேவையான உரத்தை பெற்றுக் கொள்வதற்கான அறிவுறுத்தல் மற்றும் அனுமதிபத்திரம் வழங்கும் பொறுப்பு பெருந்தோட்ட அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலுக்கு அவசியமான பூக்கள் உட்பட்ட அதுனுடன் தொடர்புடைய பயிர்ச்செய்கைக்கு தேவையான அனுமதி பத்திரத்தை விநியோகிக்கும் அதிகாரம் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நீர்மூலமான பயிர்ச்செய்கை இடைவெளியை அடிப்படையாகக் கொண்ட பயிர்ச்செய்கை ஆகியவற்றுக்கு தேவையான உரம் இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம் விவசாயத்துறை அமைச்சின் ஊடாக விநியோகிக்கப்படும்.

பெரும்போகத்திற்கு தேவையான சேதன பசளை உரம் மற்றும் நனோ நைட்ரஜன் கிருமிநாசினிகள் நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து விவசாய திணைக்களங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

ஆகவே விவசாயிகள் பெரும்போக விவசாய நடவடிக்கைகளில் ஈடுப்படுவது அவசியமாகும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 10/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை