சர்வதேசத்துடன் இணைந்து நாட்டு நலனுக்கான தொடர் நடவடிக்கைகள்

காணாமல் போனோர் தொடர்பில் விசேட கவனம்

எதிர்கால சந்ததிக்காக சுபீட்சமானதும் அமைதியானதுமான நாட்டை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் நல்லிணக்கம் மற்றும் இன ஒற்றுமையை மேம்படுத்த அரசாங்கம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்  சர்வதேச சமூகத்துடன் தொடர்ச்சியாக இணைந்து நாட்டின் நலனுக்கு செயற்படும் எமது முன்னெடுப்புகள் தொடரும் எனவும் தெரிவித்தார்.

நாட்டுக்கு பாரிய சவாலாக இருக்கும் இனஒற்றுமையை ஏற்படுத்தல், அடிப்படைவாதம் மற்றும் அதிலிருந்து தோன்றும் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுதல், மனித உரிமை மேம்பாடு என்பன தொடர்பிலும் தேவையான நகர்வுகள் இடம்பெறுவதாக குறிப்பிட்ட அவர்,காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக காணாமல் போனோரின் பட்டியல் தயாரிக்கும் பணி நிறைவடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (05) விசேட உரையொன்றை நிகழ்த்திய அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இத்தாலி, ஜெனீவா மற்றும் நிவ்யோர்க் விஜயத்தின் முன்னேற்றம் தொடர்பாகவும் விளக்கினார்.தொற்று நிலைமையில் இணைந்து செயற்படும் முக்கியம் பற்றியும் கருத்துத் தெரிவித்த அவர் நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகள் பற்றியும் தெளிவு படுத்தினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

நாம் முகங்கொடுக்கும் சவால்களில் பாரிய சவாலாக இருப்பது சமூக ஒற்றுமையாகும். உள்ளக மோதல்கள், வதைகள் அற்ற உண்மையான ஒற்றுமையான இனமாக இல்லாத சமயத்தில் நாம் மதில்கள் கட்டாமல் பாலம் அமைப்பதே செய்யவேண்டிய விடயமாகும்.

நீடித்த மோதல்களின் பின்னர் தேவைப்படும் நல்லிணக்க மேம்பாட்டிற்கு அடித்தளம் இடப்பட்டிருப்பது குறித்து ஜெனீவா மாநாட்டில் விளக்கினேன்.

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கத்துடன் காணாமல் போனோரின் பட்டியல் தயாரிக்கும் பணி நிறைவடைந்து வருகிறது. நஷ்டஈடு வழங்கும் அலுவலகத்திற்கு 3,775 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. மனித உரிமை மேம்பாட்டிற்காக மனித உரிமை ஆணைக்குழுவுக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்.

கடந்த சில வருடங்களில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றுக்காக பல்வேறு முன்னேடுப்புகளுக்காக ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

எதிர்கால சந்ததிக்காக சுபீட்சமானதும் அமைதியானதுமான நாட்டை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் இவற்றை மேற்கொண்டு வருகிறோம்.

அடிப்படைவாதம் மற்றும் அதிலிருந்து உருவாகும் பயங்கரவாதம் எமக்குள்ள பிரதான சவாலாகும். ஒரு நாட்டில் அடிப்படைவாதம் தோற்கடிக்கப்பட்டால் அது வேறு இடத்தில் வளர்வதை அனுபவ ரீதியாக கண்டுள்ளோம். இவற்றை கூட்டாக தோற்கடிப்பது குறித்து சர்வதேச நாடுகளுடன் ஆராய்ந்துள்ளோம்.பயங்கரவாதத்தை தோற்கடிக்க புலனாய்வு தகவல் பரிமாற்றம் முக்கியமானது.இதற்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியம்.

ஷம்ஸ் பாஹிம்.சுப்ரமணியம் நிஷாந்தன்

 
Wed, 10/06/2021 - 09:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை