அதானி குழு விஜயம் தனிப்பட்டதொன்று

உத்தியோகபூர்வமானதல்ல: ரமேஷ் பத்திரண தெரிவிப்பு

இந்தியாவின் அதானி குரூப் தலைவர், கௌதம் அதானி தனிப்பட்ட விஜயமாகவே இலங்கை வந்தார். அவர் அரசாங்கத்தில்  எவருடனும் பேச்சு நடத்தவில்லை என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

அதானி குரூப் தலைவர் கௌதம் அதானி இலங்கை வந்தது தொடர்பாகவும் கொழும்பு துறைமுக மேற்கு முனையம் பற்றி பேசவா அவர் வந்தார் எனவும் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த இணை அமைச்சரவை பேச்சாளர் தெரிவிக்கையில்,

அவர் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டே இங்கு வந்தார். அவர் எந்த உடன்படிக்கையும் செய்யப்படவில்லை என பதிலளித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம்

Wed, 10/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை