ஆப்கானில் சிறுவர் உரிமை மீறல்கள் அதிகரிப்பு

ஆப்கானில் சிறுவர் உரிமை மீறல்கள் அதிகரிப்பு-Afghanistan-Children Rights-UNICEF Concern

- UNICEF ஆழ்ந்த கவலை

ஆப்கானிஸ்தான் சிறுவர்கள் தம் குழந்தைப் பருவத்தை வன்முறைகள் மற்றும் முரண்பாடுகளுக்குள் இழந்துவிடக்கூடாது என்று ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (யுனிசெப்) தெரிவித்துள்ளது.

காபூலில் தலிபான்கள் இடைக்கால ஆட்சியை அமைத்ததைத் தொடர்ந்து வன்முறைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளதோடு சிறுவர் உரிமை மீறல்களும் அங்கு தீவிரமடைந்துள்ளன. இதனையிட்டு சிறுவர்களின் நலன்களுக்காக செயற்பட்டுவரும் சர்வதேச அமைப்பான யுனிசெப் நிறுவனம் இவ்வாறு கவலை வெளியிட்டிருப்பதாக 'ரிபப்ளிக்வேர்ல்ட்' சுட்டிக்காட்டியுள்ளது.

கந்தஹாரிலுள்ள ஷீஆ முஸ்லிம் பள்ளிவாசலொன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டமைக்கும் அவர்களில் 17 வயதுக்கு உட்பட்ட இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளமைக்கும் அந்த நிறுவனம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. 'ஆப்கானிஸ்தானில் சிறுவர்களும் அவர்களது உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்' என்று யுனெிசெப் அண்மைய ட்வீட் ஒன்றின் ஊடாக வலியுறுத்தியுள்ளது.

இமாம் பர்கா-இ பாத்திமா என்ற பெயர் கொண்ட இப்பள்ளிவாசலில் இடம்பெற்ற இத்தற்கொலைத் தாக்குதலில் எழுபதுக்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்-கே உரிமை கோரியுள்ளன.

இவ்வாறான கொடூரத் தாக்குதலொன்று வடக்கு நகரமான குந்தூஸிலும் அண்மையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sun, 10/24/2021 - 21:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை