பிரிட்டிஷ் முடியாட்சிக்கு பதில் பார்படோஸ் ஜனாதிபதி தேர்வு

கரீபியன் தீவு நாடானா பார்படோஸ் தனது கடந்தகால காலனித்துவத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அரச தலைவர் பதவிக்கு பிரிட்டிஷ் எலிசபெத் மகாராணிக்கு பதில் முதல் முறை ஜனாதிபதி ஒருவரை தேர்வு செய்துள்ளது.

கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் சன்ட்ரா மேசன் ஜனாதிபதி பதவிக்காக மூன்றில் இரண்டு வாக்குகளை பெற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது ஒரு மைல்கல் என்று அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் பிரிட்டிஷ் காலனியான பார்படோஸ் 1966 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. எனினும் 300,000 மக்கள் தொகையை மாத்திரமே கொண்ட அந்த நாடு தொடர்ந்து பிரிட்டன் முடியாட்சியுடன் உறவை பேணியது. எனினும் முழுமையான இறைமையை பெறுவது பற்றி கோசம் அண்மைக் காலத்தில் வலுத்து வந்தது.

இந்நிலையில் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற 55 ஆவது சுதந்திர தினமான வரும் நவம்பர் 30 ஆம் திகதி மேசன் பதவி ஏற்கவுள்ளார்.

Sat, 10/23/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை